வாட்ஸ்-அப்பில் வந்த மெசேஜ்.. 15 ஆயிரத்தை ஏமாந்த மிர்ச்சி செந்தில்..

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக, பெரும் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தனது Contact-ல் உள்ள பெரிய நபரின் வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து, பணம் தேவை என்று எனக்கு மெசேஜ் வந்தது. மேலும், ஜி பே நம்பரை அனுப்பி, அதில் பணத்தை அனுப்புமாறு அந்த நபர் கூறினார்.

நானும், ஏதும் சரிபார்க்காமல், அந்த நம்பருக்கு பணத்தை அனுப்பினேன். அதன்பிறகு, அந்த G Pay நம்பரின் பெயரை பார்த்தால், யோகேந்தர் என்று உள்ளது.

சந்தேகம் அடைந்து, அந்த பெரிய நபருக்கு செல்போனில் அழைப்பு விடுத்து கேட்டபோது தான், அவரது வாட்ஸ்-அப்பை சிலர் ஹாக் செய்திருப்பது தெரியவந்தது. எனவே, யாராவது அவசரம் என்று பணம் கேட்டால், விசாரிக்காமல் பணத்தை அனுப்பாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இவரது இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News