பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 6 நாட்களில், 75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.
இன்னும் சில நாட்களில், இந்த திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்துவிடும் என்று கணிக்கப்படுகிறது. இது நடந்தால், தான் நடித்த முதல் இரண்டு படங்களிலும், 100 கோடி வசூலை ஈட்டிய முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை, பிரதீப் ரங்கநாதன் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.