அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தின் டீசர், நேற்று மாலை 7 மணிக்கு ரிலீஸ் ஆகியிருந்தது. டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும், தங்களது உற்சாகத்தை கமெண்ட்ஸ் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்த டீசரை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “குட் பேட் அக்லி படத்தின் டீசர் புல் எனர்ஜியுடன் இருக்கிறது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், அஜித் தொடர்பான படங்களுக்கு வாழ்த்துகள் எதுவும் பெரிய அளவில் கூறாத கார்த்திக் சுப்புராஜ், தற்போது வாழ்த்து கூறியுள்ளார். இதனால், அஜித்தின் அடுத்த படத்தை அவர் தான் இயக்க உள்ளார் என்று பரவிய தகவல், உண்மையாக இருக்குமோ என்று, ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.