படிக்க வந்த 20 வயது மாணவி.. காதலித்து 2-வது திருமணம் செய்த 42 வயது ஆசிரியர்..

காதலுக்கு கண் இல்லை என்று பழமொழி ஒன்றை கூறுவார்கள். அதனை உண்மையாக்கும் வகையிலான சம்பவம், பீகார் மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் மடுக்நாத். 42 வயதான இவர், ஆங்கில மொழி கற்றுத் தரும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். இந்த பயிற்சி வகுப்பில், 20 வயதான ஜூலி என்ற பெண் சேர்ந்துள்ளார்.

வகுப்பில் சேர்ந்த சில நாட்களில் நெருங்கி பழகி வந்த இருவரும், காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, அந்த பெண்ணை பெற்றோர்கள் சம்மதத்துடன், அவர் கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. மடுக்நாத்திற்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி பல வருடங்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இது அவருக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News