சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பக்கம், தமிழக செஸ் வீராங்கனையான வைஷாலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம். நான் தான் வைஷாலி. பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதளப் பக்கத்தை, நான் கையாள்வது, எனக்கு த்ரில்லிங்காக உள்ளது.
அதுவும் மகளிர் தினத்தன்று. நான் செஸ் விளையாட்டை விளையாடுவேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். பல்வேறு செஸ் தொடர்களில், நமது நாட்டின் சார்பில் விளையாடுவது எனக்கு பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.