சப்பாத்தி தொடர்பாக பிரச்சனை.. மாணவர்கள் இடையே மோதல்..

கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில், கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், வடஇந்திய மாணவர்கள், தென்னிந்திய மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை இரவு அன்று, பல்கலைக்கழகத்தின் உணவு விடுதியில், மாணவர்கள் இரண்டு தரப்பாக பிரிந்துக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில், ஒருவர் காயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் சண்டையிட்டதற்கான காரணமாக கூறப்படுவது என்னவென்றால், மெஷின் மூலமாக செய்யப்படும் சப்பாத்திகள் வேண்டும் என்று வடஇந்திய மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால், கையால் செய்யப்படும் சப்பாத்தி வேண்டும் என்று, தென்னிந்திய மாணவர்கள் கேட்டுள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த மாணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News