ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டிற்குமான போர், கிட்டதட்ட 3 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. எனவே, இந்த போரை நிறுத்துவதற்கு, டெனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முயற்சித்து வருகிறது.
இந்த முயற்சியின் விளைவாக, சவுதி அரேபியாவில், அமெரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகள், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்துவதற்கு, உக்ரைன் நாடு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ உதவிகளையும், உளவுத்துறை செய்திகளையும், அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில், ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.