“தமிழ்நாடு சமரசம் செய்யாது” -அன்பில் மகேஷ்!

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது பெரும் அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தது.

மேலும், திமுகவின் எம்.பி-க்கள், நாடாளுமன்றத்திலும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தமிழ் என்பது மொழி மட்டுமில்லை. அது தங்களது ஆணி வேரோடு ஒன்றாக கலந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், வலுவான இருமொழி அடிதளத்துடன் தமிழகம் சிறந்து விளங்கும்போது, மும்மொழிக் கொள்கை தேவையில்லை என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

தொடர்ந்து, இது மொழி பற்றியது மட்டுமல்ல. கல்வி முறையை பாதுகாப்பது பற்றியது. மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில், தமிழ்நாடு சமரசம் செய்யாது என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News