கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ.
காதல், ஆக்ஷன், காமெடி ஆகியவை கலந்த வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் மே 1-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், ரெட்ரோ படம் தொடர்பான புதிய தகவல் ஒன்றை, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதாவது, இந்த திரைப்படத்திற்காக, நடிகை பூஜா ஹெக்டே, தனது சொந்த குரலில், தமிழில் டப்பிங் பேசியுள்ளார். தமிழ் தெரியாத நடிகை ஒருவர், தமிழை கற்றுக் கொண்டு, டப்பிங் பேசியிருப்பது, நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.