வேளாண் பட்ஜெட் தாக்கல்.. முக்கியமான அம்சங்கள் என்ன?

2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, மார்ச் 14-ஆம் தேதியும், வேளாண் நிதி நிலை அறிக்கை மார்ச் 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படுமென, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்று சட்டமன்றத்தில், நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், இன்று சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், அவர் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து, தற்போது பார்க்கலாம். அவை பின்வருமாறு:-

2019-20 இல் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 2023-24-ல் 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு.

வேளாண்மை செழித்திட உழவர்களுக்கு உதவும் வகையில், ஆயிரம் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள். மக்கள் மருந்தகம், முதல்வர் மருந்தகம் போன்று உழவர் நல சேவை மையங்கள் செயல்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான மையங்கள் அமைக்க மானியம். 30 சதவீதம் மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும்.

ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் நெல் உற்பத்தித் திறனில் சாதனை படைத்துள்ளன. எனவே, 1000 முன்னோடி உழவர்களை, மேற்கண்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல். அதற்காக ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு.

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தோருக்கான நிதி உதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான இழப்பீடு 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்வு. இறுதிச் சடங்கிற்கு வழங்கப்படும் நிதி 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து, ரூ. 10 ஆயிரமாக அதிகரிப்பு.

கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகைக்காக, 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2025-26 ல் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம். மலைவாழ் விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை வழங்கப்படும்.

பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க, 1.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு. உதிரிவகை ரோஜா மலர்களின் சாகுபடிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு 1.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பலா மேம்பாட்டு இயக்கத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மொத்தமாக, 1.40 மணி நேரம், இந்த பட்ஜெட் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, வேளாண் பட்ஜெட்டிற்கு மட்டும், 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் மொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News