2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தொடர்ந்து, இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் குறித்து, பல்வேறு வேளாண்துறை நிபுணர்கள், தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்கட்சித் துணைத் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், வேளாண் பட்ஜெட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பழனிசாமி, இது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது என்றும், விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் இருப்பது என்பதே போலியானது என்றும் விமர்சித்தார்.
மேலும், வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றாக இணைத்து, அவியல் போல ஒரு பட்ஜெட்டை அறிவித்துள்ளனர் என்றும், அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான், இந்த பட்ஜெட்டில் உள்ளன” என்றும், “விவசாயிகளை ஏமாற்றுவதில், திமுகவினர் வல்லவர்கள்” என்றும் விமர்சித்தார்.