தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருபவர் வேதிகா. முனி, காஞ்சனா 3, காளை, பரதேசி உள்ளிட்ட தமிழ் மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர், கடைசியாக பேட்ட ரேப் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், எப்போதும் ஒல்லியாகவே எப்படி உள்ளீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த அவர், திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பதே, தான் ஒல்லியாக இருப்பதற்கு காரணம் என்று கூறியுள்ளார். மேலும், கடைசி வரை, இப்படியே இருக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.