கையில் காயம்.. வீடியோ வெளியிட்ட வரலட்சுமி!

போடா போடி, விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, சர்க்கார் என்று பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் வரலட்சுமி. சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட இவர், தற்போதும் சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சண்டை காட்சி ஒன்றை படமாக்கியபோது, கட்டை விரலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், காயம் குணமாகிய பிறகு, படப்பிடிப்பில் கலந்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவர் குணமடைய வேண்டும் என்று, கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News