கடந்த மார்ச் 6-ஆம் தேதி அன்று, தமிழக அரசின் டாஸ்மான் நிறுவனத்தின் அலுவலகங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில், ஆயிரம் கோடி ரூபாய் வரை, ஊழல் நடந்திருப்பதாக, குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பாஜகவினர் போராட்டம் நடத்த உள்ளனர். இவ்வாறு இருக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், மதுவிற்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்தை வரவேற்கிறோம் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் மதுபானம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், எங்களின் நிலைப்பாட்டிற்கு குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், வரவேற்பு அளிப்போம் என்றும் தெரிவித்தார்.