டெல்லி அணிக்கு புதிய துணை கேப்டன் நியமனம்!

உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ஐ.பி.எல். இந்த கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன், வரும் 22-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த சீசனில், மொத்தமாக 10 அணிகள் மோத உள்ளனர்.

இந்நிலையில், இந்த 10 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், புதிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டுக்கான தொடரில், டெல்லி அணியின் துணை கேப்டனாக, பாப் டு பிளெஸ்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இதற்கு முன்னர், பெங்களூர் அணியின் கேப்டனாக பதவி வகித்துள்ளார். டெல்லி அணிக்கான முதல் போட்டி, வரும் 24-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெண்ட்ஸ் அணியை, டெல்லி எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News