கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தற்போது அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படம், வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் விஜய் தான் தமிழகத்தின் நம்பர் 1 நடிகர் என்று கூறிய வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜ், துணிவு படத்தின் தெலுங்கு ரீமேக்கை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தெலுங்கு மாநிலங்களின் விசாகப்பட்டினம் மற்றும் நிஜாம் பகுதிகளில், தில் ராஜூவின் ராதாகிருஷ்ணன் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்யவுள்ளது. விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என்று கூறிவிட்டு, அஜித் படத்தை வாங்கியதை சுட்டிக்காட்டி, அஜித் ரசிகரக்ள் கிண்டல் செய்து வருகின்றனர்.