தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர், தற்போது ஒடேலா படத்தின் 2-ஆம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். நாம் தான் அந்த அற்புதங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.