நாடாளுமன்றத்தின் தொகுதிகள் அடுத்த ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதனால், தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், அதன் நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில், டி.கே.சிவக்குமார் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சொந்த மாநிலம் மீது அண்ணாமலைக்கு அக்கறை இல்லை. அவர் பாஜகவுக்கே விசுவாசம் காட்டுகிறார்” என்று கூறினார்.
மேலும், அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது என்றும், அவர் கட்சிக்காக வேலை மட்டுமே செய்கிறார். அவரது வேலையை அவர் செய்யப்படும் என்றும், டி.கே.சிவக்குமார் விமர்சித்தார்.