தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள், வேனில் நிச்சயதார்த்தத்திற்கு சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்துள்ளது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.