மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் தனிப்படை காவலர் மலையரசன். இவர், கடந்த 19-ஆம் தேதி அன்று, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், மலையரசன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரன் என்பவர் மீது, காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அவரை பிடித்து, விசாரணை நடத்துவதற்கு, காவல்துறையினர் முயன்றனர். ஆனால், அவர்களது பிடியில் இருந்து, மூவேந்திரன் தப்ப முயன்றார். இதன்காரணமாக, அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் காயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளி ஒருவரை, காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.