காலமானார் நடிகர் மனோஜ்.. அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்..

தாஜ் மகால் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இந்த படத்திற்கு பிறகு, அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் அவதாரம் எடுத்த இவர், மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இவ்வாறு பல்வேறு பரிமானங்களில் இயங்கிய மனேஜ், நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார்.

இவரது மறைவு செய்தியை அறிந்த பல்வேறு பிரபலங்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நடிகர்கள் சூர்யா, நாசர், சிவக்குமார், கருணாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர், நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர், சமூக வலைதளங்களில், தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். மனோஜ் பாரதிராஜாவின் இந்த மரணம், ரசிகர்கள் மத்தியில், நீங்கமற சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News