பாரதிராஜாவின் மகனும், தமிழ் சினிமாவின் நடிகருமானவர் மனோஜ். தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அல்லி அர்ஜூனா, சமுத்திரம், மாநாடு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கிய மனோஜ், நேற்று இரவு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவை அறிந்த பல்வேறு பிரபலங்கள், நேரிலும், சமூக வலைதளங்களிலும், தங்களது இரங்கல்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில், அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.