விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெணி. செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
நீண்ட நாட்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த திரைப்படத்திற்காக, பாடல் ஒன்றை மட்டும் படமாக்க வேண்டும் என்றும், அந்த ஒரு பாடலுக்கு 5 கோடி ரூபாய் பட்ஜெட் வேண்டும் என்றும், தயாரிப்பாளரிடம் விக்னேஷ் சிவன் கேட்டுள்ளாராம். இதனால், தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம்.