டாஸ்மாக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை, வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் கடந்த 5-ஆம் தேதி அன்று முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், திமுகவிற்கு அச்சம் ஏற்பட்டுவிட்டதா என்றும், அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்திற்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை, வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என தாங்கள் கோரவில்லை என்றும், இதை எதிர்கட்சித் தலைவர் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்றும், அவர் கூறினார்.
மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லை என்றும், இதனை தங்களால், நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்றும், அவர் தெரிவித்தார்.