2025-ஆம் ஆண்டில், எத்தனை திரைப்படங்கள் வெளியாகின என்பது குறித்தும், அதில் எத்தனை திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்பது குறித்தும், தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, மொத்தமாக 72 திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது.
இதில், வெறும் 5 திரைப்படங்கள் மட்டும் தான் வணிக ரீதியாக வெற்றியை பதிவு செய்துள்ளன. அதாவது, டிராகன், மத கஜ ராஜா, வீர தீர சூரன், குடும்பஸ்தன், மர்மர் ஆகிய 5 திரைப்படங்கள் மட்டும், அதன் பட்ஜெட்டை காட்டிலும், அதிக அளவிலான தொகையை வசூலித்துள்ளது.
மற்றபடி, அஜித்தின் விடாமுயற்சி, ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை, அருண் விஜயின் வணங்கான், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.