சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்ததைப் போல், தெற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதன்காரணமாக, ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை, தமிழகத்தின் ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம்,புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.