எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வரி உயர்வு இருந்தபோதிலும், பெட்ரோல் டீசல் விலையில், எந்தவொரு மாற்றமும் இருக்காது என்று, எண்ணெய் நிறுவனங்கள் கூறியதாக, மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்ந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம், மானிய விலையில் 853 ரூபாய்க்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 550 ரூபாய்க்கும், சிலிண்டர்களை பெற முடியும். ஒரே நாளில், சமையல் எரிவாயு விலை, கலால் வரி ஆகியவை உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News