சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், துணை வேந்தர்கள் நியமனத்தில் குறுக்கிடுகிறார் என்றும், தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதாகவும், நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒரு மாத காலத்திறகுள் ஒப்புதல் தர வேண்டும் என்றும், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.