“ஏதோ பெருசா பண்றாங்க” – அல்லு அர்ஜூன் – அட்லி கூட்டணி.. புதிய பட அறிவிப்பு வீடியோ..

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படத்தில், அல்லு அர்ஜூன் கடைசியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றதுடன், ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு மேல், வசூலித்திருந்தது.

இதனால், இவரது அடுத்த படம் குறித்து, ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், அல்லு அர்ஜூனின் அடுத்த படம் தொடர்பான, அறிவிப்பு வீடியோவை, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, அட்லி இயக்க உள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News