ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

இந்த ஆண்டு தொடக்கம் முதல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக சரிந்து வந்தது.

ஆனால், இன்று காலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் 8 ஆயிரத்து 290 ரூபாய்க்கும், ஒரு சவரன் 66 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, ஒரு சவரன் தங்கம் 67 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரத்து 410 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிகரித்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News