மாநில தலைவர் ஆனார் நயினார் நாகேந்திரன்!

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி அன்று, தமிழக பாஜகவின் தலைவராக, அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். இவர் ஆட்சி அமைத்ததில் இருந்து, ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை மிகப்பெரிய அளவில், தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார்.

மேலும், இவரது தலைமையில், பாஜகவின் வளர்ச்சி என்பது நல்ல முறையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே, தலைவர் பொறுப்பில் இருந்து, அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக, சமீப காலமாக தகவல் ஒன்று பரவி வந்தது.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், நேற்று அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கான பதவி ஏற்பு விழா, சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் முக்கிய தலைவர்களான கிஷன் ரெட்டி, தருண் சுக் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தற்போது, அதிகாரப்பூர்வமாக, நயினார் நாகேந்திரன் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News