தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர், கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த சினிமா ஜோடி, ரசிகர்களுக்கு எப்போதும் ஃபேவரைட்டான ஒன்றாக உள்ளது. இவ்வாறு இருக்க, நடிகை சமந்தா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது, கோலிவுட்டில் உங்களது லக்கி சாம் யார் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த அவர், நடிகர் விஜய் தான், தன்னுடைய லக்கி சாம் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.