தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு ஆண்டுகள் இருந்தபோதிலும், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், 2026-ஆம் ஆண்டுக்கான தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், ஒரே ஒரு கட்சியுடன் தான் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. அது டெனால்டு டிரம்பின் கட்சியுடன் தான் என்று தெரிவித்தார். இவரது பேட்டியின் மூலம், மீண்டும் தனித்து போட்டியிட சீமான் முடிவு செய்திருப்பது உறுதியாகியுள்ளது.