திமுகவின் கூட்டணி மிகவும் உறுதியாக இருப்பதால், அதனை பிரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக, கூட்டணி தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை, கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கு பல முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிலைகள் திறக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தன்னை துருப்பு சீட்டாக வைத்து, திமுக கூட்டணியை உடைத்து விடலாம் என்று பலரும் கணக்கு போடுவதாக தெரிவித்தார்.
மேலும், தான் வளைந்து கொடுப்பவன் தான். ஆனால், தன்னை ஒடித்து விட முடியாது என்றும், அவர் கூறினார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், அதிமுக கூட்டணியை பாஜக தான் தலைமை தாங்குகிறது என்றும், அதிமுக தான் கூட்டணியை தலைமை தாங்குகிறது என்றால், எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணியை அறிவித்திருக்க வேண்டும் என்றும், அவர் விமர்சித்துள்ளார்.