நடிகர் ஸ்ரீ உடல் மெலிந்த நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவருக்கு உளவியல் ரீதியான சிகிச்சை தேவை என்றும் கூறியிருந்தனர்.
இதற்கிடையே, ஸ்ரீ-யின் இந்த நிலைக்கு காரணம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தான் என்றும், இறுகப்பற்று படத்தில் நடித்ததற்கு சம்பளம் தரவில்லை. அதனால் தான் அவர் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார் என்றும், நண்பர்கள் கூறியிருந்தனர். இதன்காரணமாக, தயாரிப்பாளரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், எஸ்.ஆர்.பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீயின் உடல்நலம் கருதி, உண்மையிலேயே நாங்கள் வருந்துகிறோம். குடும்பத்தினர்களும், உறவினர்களும், நாங்களும், அவரை தொடர்பு கொள்ள பல நாட்களாக முயற்சித்து வருகிறோம்.
இதற்கிடையே, ஸ்ரீ-யின் இந்த நிலை தொடர்பாக, பல்வேறு யூகங்கள் உருவாகி வருவது, துர்தர்ஷ்டவசமானது. ஆனால், ஸ்ரீ-யை தொடர்பு கொண்டு, அவரை மீண்டும் நல்ல நிலைக்கு அழைத்து வருவது தான், எங்களது முதன்மை நோக்கமாக தற்போது உள்ளது” என்று கூறியுள்ளார்.