தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது பல்வேறு பாடல்கள், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இருந்து வருகிறது.
இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், இசை உலகில் AI-ன் வளர்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த அவர், “உயிருடன் இருக்கும் பாடகர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பேன்” என்றும், “பல்வேறு பாடகர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், எதற்காக இறந்த பாடகர்களின் குரல்களை பயன்படுத்த வேண்டும் என்றும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.