ரயிலில் ATM.. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.. பரிசோதனை முயற்சி வெற்றி..

ரயில்களில் ஏ.டி.எம். மெஷினை வைக்கும், பரிசோதனை முயற்சி, தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ரயில்களில், ஏ.டி.எம்-கள் இருப்பதில்லை. இதன்காரணமாக, ரயிலில் பயணிக்கும்போது, பணம் தேவைப்படுவதாக இருந்தால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த குறையை நீக்கும் வகையில், இந்திய ரயில்வே, ரயில்களில் ஏ.டி.எம்-ஐ பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மன்மத் மற்றும் மும்பை பகுதிகளுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில், முதன்முறையாக ஏ.டி.எம்-ஐ வைத்து, பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது, தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளதால், இனி தொடர்ச்சியாக பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும், பஞ்சாவதி எஸ்க்பிரஸ் ரயில் மட்டுமல்லாது, ஜன்சதாப்தி எஸ்க்பிரஸ் ரயிலிலும், ஏ.டி.எம். மெஷின் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. Bank Of Maharastra-வுடன் இணைந்து, இந்த முயற்சியை இந்திய ரயில்வே முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News