கல்லூரி முதல்வரின் அறையில் சாணியை பூசிய மாணவர்கள்! அதிர வைத்த காரணம்!

டெல்லியின் பல்கலைக்கழகத்தின் கீழ் லஷ்மிபாய் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் பிரத்யுஷ் வட்சலா, வகுப்பறைகளில், மாட்டு சாணத்தை பூசியுள்ளார்.

இதுகுறித்து கேட்டதற்கு, வெப்பத்தை தனித்து, குளுமையான சூழலை ஏற்படுத்துவதற்காக, கல்லூரியின் பேராசிரியர்கள் செய்யும் ஆராய்ச்சி தான் இது என்று கூறியிருந்தார். ஆனால், இந்த செயல் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் தலைவர் ரோனக் காட்ரி, லஷ்மிபாய் கல்லூரியின் முதல்வர் அறையில், மாட்டு சாணத்தை பூசி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், அலுவலக சுவர்களில், சாணியை பூசி, கல்லூரி முதல்வருக்கு உதவுவதற்கு தான், நாங்கள் அங்கு சென்றோம் என்று கூறியுள்ளார்.

மேலும், தனது அறையில் உள்ள AC-யை நீக்கிவிட்டு, அதனை மாணவர்களுக்கு தந்துவிடுவார் என தாங்கள் நம்புவதாகவும் கூறி, கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம், இதுவரை எந்தவொரு எதிர்விணையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News