காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக மாறியிருப்பவர் சூரி. இவர், விடுதலை, விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி என்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார்.
இதன்காரணமாக, இவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு என்பது, ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்து, நடிகர் சூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மண்டாடி என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி தான், இந்த படத்தை இயக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று மாலை 7 மணிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகவும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், சூரியின் வெறித்தனமான லுக், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.