கேரளாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், சோதனை நடத்தினர். அப்போது, அந்த ஓட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ, அங்கிருந்து தப்பியோடினார்.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டடிருந்தது. அதன்படி, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், சைன் டாம் சாக்கோவிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லையாம்.
இதன்காரணமாக, அந்த நடிகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது, மலையாள சினிமா உலகில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.