சென்னை அணிக்கு காத்திருக்கும் ஆபத்துகள்.. புட்டு புட்டு வைத்த ரெய்னா..

இன்று நடக்கும் ஐ.பி.எல் போட்டியில், CSK-வை காட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓங்கி இருக்கும் என, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான 2-வது லீக் போட்டி, இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து, CSK அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தன்னுடைய கணிப்புகளை தெரிவித்துள்ளார்.

அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி, மிகவும் பலமாக உள்ளது என்றும், டிரெண்ட் பவுல்ட் சிறப்பாக பந்துவீசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். மும்பை அணியில் பல்வேறு அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அதன் கைகள் தான் ஓங்கி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பவர் பிளேயில், சி.எஸ்.கே வீரர்கள் விக்கெட்டுக்களை இழப்பதாக கூறிய ரெய்னா, அவர்கள் குறைவான டாட் பால்களை ஆட வேண்டும் என்றும், முதல் ஆறு ஓவர்களில், அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்றும், கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News