“நடிகனாக அடுத்த கட்டம்” – எஸ்.ஜே.சூர்யா தந்த அப்டேட்!

இயக்குநராக அறிமுகமாகி, தற்போது தலைசிறந்த நடிகராக உயர்ந்து நிற்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர், தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெணி, சர்தார் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு, கில்லர் என்ற படத்தை, இயக்கி நடிக்க உள்ளார்.

இந்நிலையில், தனது கில்லர் படம் குறித்து, எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளார். அதாவது, “நான் நடிகனாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் காலம் வந்துவிட்டது.

நீண்ட நாட்களுக்கு வில்லனாகவே நடிக்க முடியாது. அதற்காக நான் நடிப்பதற்கு வரவில்லை” என்று தெரிவித்தார். மேலும், “நான் இயக்கும் படங்களை பிடிக்கும் ரசிகர்களுக்கு, கில்லர் படமும் நிச்சயம் பிடிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News