ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயக்குமார் அமைச்சராக பணியாற்றியபோது, அவரது அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னுடைய நிலத்தை அபகரித்ததாக, மருமகன் மகேஷ் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து, உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு மீது, இன்று நடத்தப்பட்ட விசாரணையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.