நேற்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், உயிரிழந்த 26 பேரில், இந்திய கடற்படை அதிகாரியும் ஒருவர் என்று, தற்போது தெரியவந்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த 26 பேரில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் ஒருவர் என்பது, தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவரது மனைவி, திடீரென தாங்கள் இருக்கும் இடத்திற்கு தீவிரவாதிகள் வந்ததாகவும், கணவரது பெயரை கேட்ட பின்னர் அவர் ஒரு முஸ்லீம் அல்ல எனக் கூறி, சுட்டுக் கொன்றதாகவும், மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
6 நாட்களுக்கு முன்பு திருமணமான வினய் நர்வால், தேனிலவு கொண்டாடுவதற்காக, காஷ்மீர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.