“உங்கள் பிரதமரிடம் இதை சொல்” – பெண்ணிடம் சொல்லி அனுப்பிய பயங்கரவாதிகள்!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் நேற்று அதிக அளவில் கூடியிருந்தனர். அப்போது, அங்கு திடீரென புகுந்த தீவிரவாதிகள், கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் கொல்லப்பட்டதுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, தனக்கு நடந்த கொடூர சம்பவத்தை, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண், கூறியுள்ளார். அதாவது, அந்த பெண் தனது கணவன், மகனுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள், அந்த பெண்ணின் கணவனை துடிதுடிக்கு கொன்றுள்ளனர். இதனை பார்த்து கதறிய அந்த பெண், தன்னையும் கொன்றுவிடும்படி, தீவிரவாதிகளிடம் கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு, உன்னை கொல்ல மாட்டேன். இங்கு நடந்தவற்றை, உங்கள் பிரதமரிடம் போய் சொல் என்று, தீவிரவாதிகளில் ஒருவர் கூறியுள்ளார். இவ்வாறு நடந்த சம்பவம் குறித்து, அந்த பெண் பேட்டி அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News