மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை பகுதியின் அரசு பேருந்து, பன்வல் பகுதியில் இருந்து கல்யான் பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில், 20 வயதுடைய இளம் ஜோடியினர், ஆபாசமாக நடந்துக் கொண்டுள்ளனர்.
இன்னொரு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த நபர், இவர்களது இந்த செயலை, பேருந்தின் ஜன்னல் வழியாக பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து அறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், இந்த சம்பவத்தை கவனிக்காத பேருந்து நடத்துநர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர்.