கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. வரும் மே 1-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
ரிலீஸ்-க்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில், படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “இந்த கதை, முதன்முதலில் ரஜினிக்காக எழுதப்பட்டது. எனவே, முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக எழுதியிருந்தேன். பின்னர், சூர்யாவுக்காக, காதல் கதையாக மாற்றி, அவரிடம் கூறினேன்” என, அவர் கூறியுள்ளார்.