ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி வெளியான அவதார் 2 திரைப்படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருப்பினும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், இறுதிக் காட்சியில் இடம்பெற்ற ஆக்ஷன் சீக்வன்ஸ், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவ்வாறு இருக்க, அவதார் 2 திரைப்படம், இதுவரை 1.3 பில்லியன் அமெரிக்கா டாலர்களை வசூலித்துள்ளார்.
இந்திய மதிப்பில் பார்க்கும்போது, 10 ஆயிரம் கோடிக்கு மேல், இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம். என்ன தான் பல கோடிகளை இந்த திரைப்படம் வசூலித்தாலும், படத்தின் பட்ஜெட்டை நெருங்குவதற்கு, இன்னும் 700 மில்லியன் டாலர்கள் வசூலிக்க வேண்டுமாம்.. இந்த தகவல், நெட்டிசன்களுக்கு இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.