மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.. பழனியில் பக்தர்கள் அவதி..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகனுக்கு முடிக்காணிக்கை செய்வது வழக்கம்.

இங்கு 300க்கும் மேற்பட்ட மொட்டை அடிக்கும் தொழகலிளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயும், கூடுதலாக ஒரு மொட்டைக்கு 30ரூபாய் வீதம் மாதம் சராசரியாக 13ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பழனியில் 308க்கும் மேற்பட்ட மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

மொட்டை அடிக்கும் தொழிலார்களுக்கு பழனி கோவில் நிர்வாகம் வழங்கும் ஊதியம் போதவில்லை என்றும் சிறுசிறு தவறு நடந்தால் கூட பணியிடை நீக்கம் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று முடிக்கொட்டைகை கண்காணிப்பாளர் அர்ஜுனன் வருகை பதிவேட்டை பார்த்துவிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பணிக்கு வராத ஊழியர்களின் வருகையை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மொட்டை அடிக்கும் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News