பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை அடைத்து எடுத்துச் செல்லும் வீடியோ காட்சி

பாகிஸ்தான் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் சமையல் ஏரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்வாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள மக்கள் பிரம்மாண்டமான பிளாஸ்டிக் பைகளில் எரிவாயுவை நிரப்பி வாங்கிச் செல்கிறார்கள்.

இவ்வாறு, வாங்கிச் சென்ற எரிவாயுப் பைகளில் சிறிய குழாயைப் பொருத்தி பயன்படுத்துகின்றனர் என தெரிகிறது. இந்த பிளாஸ்டிக் பைகளில் மூன்று அல்லது நான்கு கிலோ எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படி எரிவாயுவை எடுத்துச் செல்லும்போது சிறு தவறு நடந்தாலும் பெரிய விபத்து ஏற்படும் என வீடியோவை பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

Recent News